முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு பரிணாமத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக திருப்பதி நகரின் நிலத்தடி நீர் அளவு குறைந்தது மட்டுமல்லாமல், சுற்றுப்புற மற்றும் சுகாதாரச் சீர்கேடும் அதிகரித்துள்ளது. மேலும், திருப்பதி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பட்டியலில் உள்ளதால், அதை உலகத் தரம் வாய்ந்தாக மாற்ற ஆந்திர அரசு முயன்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பதி நகரில், பிளாஸ்டிக் பொருட்களைத் தடை செய்ய நகராட்சி முடிவு செய்து அதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. 51 மைக்ரானிற்குக் கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொருட்கள், குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், தெர்மோகோலால் செய்யபடும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து