முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த தினகரன் சதி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 5 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொண்டர்களின் எழுச்சியை கண்டு, அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த தினகரன் சதி செய்கிறார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தினகரன் பேட்டி...

கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன்படி அவரை சந்தித்தேன் என்றும், மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார் என்றும் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

சந்திக்கவே இல்லை...

இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

டி.டி.வி. தினகரன் புதிய பிரச்சனை ஒன்றை கூறி மக்களையும், கட்சி தொண்டர்களையும் குழப்புகிறார். இந்த குழப்பங்கள் அனைத்தையும் தினகரன் தங்கத்தமிழ்செல்வன் மூலமே ஏற்படுத்தி வருகிறார். குறிப்பிட்ட அன்றைய தினத்தில் தினகரனை சந்தித்தது உண்மைதான். ஆனால் எப்போது நான் எடப்பாடியுடன் இணைந்தேனோ அப்போதிருந்து தினகரனை திரும்பவும் சந்திக்கவே இல்லை.

சதி செய்கிறார்...

ஆர்.கே.நகரில் எப்படி பொய்களை சொல்லி சொல்லியே ஜெயித்தாரோ, அதே போல திருப்பரங்குன்றத்திலும் பொய்களை அள்ளி வீசி இடைத்தேர்தலை ஜெயிக்கலாம் என நினைக்கிறார். மேலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அ.தி.மு.க.-வின் எழுச்சியை தடுக்கவும், கட்சியில் பிளவை ஏற்படுத்தவுமே டி.டி.வி. சதி செய்கிறார். இத்தனை தரக்குறைவான, சின்னத்தனமான அரசியலை தினகரன் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. தினகரன் வாயை திறந்தாலே பொய் பொய்யாக பேசுகிறார். ஆனால் உண்மைக்கு மாறாக இதுவரை பொய்யான தகவல் எதையுமே சொன்னதில்லை.

தொடர்பே இல்லை...

2017-ம் ஆண்டு, ஜூலை 12-ம் தேதி டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான். அப்போது நான் தர்மயுத்தம் நடத்தி வந்தேன். எனவே அவரை சந்திக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் நூறு முறையாவது எனக்கு அழைப்பு வந்தது. எனவே மரியாதை நிமித்தமாக அவரை நான் சந்தித்தேன். இது எனது உடன் இருந்தவர்களுக்கு கூட தெரியாது. ஆனால், அவர் கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் பேசினார். எனவே நான் அவரை விட்டு விலகி வந்து விட்டேன்.

இதற்கு அடுத்த மாதம்தான் அ.தி.மு.க. இணைப்பு நடைபெற்றது. அதன்பிறகு தினகரனுடன் எனக்கு தொடர்பே இல்லை.

வருத்தம் தெரிவித்தார்...

தினகரன் தரப்பு அளித்த பிரஸ் மீட்டையடுத்து, தினகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவர்கள் சின்னத்தனமாக அரசியல் செய்வார்கள் என எனக்கு தெரியாது என்று அந்த நபர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்.  பா.ஜ.க.வுடன் நான் கூட்டணி வைத்திருந்ததாக 4 நாட்கள் முன்புதான் தினகரன் கூறியிருந்தார். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பணிகளை பார்த்ததும் தினகரன் விரக்தியில் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். எந்த இயக்கத்தில் இருக்கிறோமோ அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். எனது அரசியல் பயணத்தை இப்படித்தான் நடத்தி வருகிறேன்.

18 எம்.எல்.ஏ.க்களாக...

நான் தர்மயுத்தம் நடத்திய போது 36 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்னுடன் உள்ளதாக தினகரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். நான் தர்மயுத்தம் நடத்தும் நிலையில், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. கட்சி உடையப் போகிறதே என நான் வருத்தப்பட்டேன். அப்போதுதான் அமைச்சர்கள் தங்கமணி, வீரமணி உள்ளிட்டோர் என்னை சந்தித்து, நீங்கள் எதற்காக தர்மயுத்தம் நடத்துகிறீர்களோ அதே மனநிலையில்தான் நாங்கள் உள்ளோம். தினகரனால் கட்சி உடைந்துவிட கூடாது என்றனர். எனவே, மாபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி தாருங்கள். எனக்கு பதவி வேண்டாம் என்றுதான் கூறினேன். ஆனால் நீங்களும் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என கூறி எனக்கு துணை முதல்வர் பதவி தந்தனர். இப்படித்தான் நான் அ.தி.மு.க. இணைப்பை ஏற்படுத்தினேன். இதனால் தினகரனுக்கு, 36 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு என்பது 18 எம்.எல்.ஏ.க்களாக குறைந்தது.
என்ன அருகதை இருக்கிறது

நான் ஒன்று கேட்கிறேன். அம்மா 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது நாங்கள் எல்லாம் தாடி வைத்துக் கொண்டு, கோவில் கோவிலாக போய்க் கொண்டிருந்தோம். ஆனால் தினகரன் அந்தப் பக்கமே வரவில்லை. அவர் என்ன செய்து கொண்டிருந்தார். எந்தக் கோவிலுக்குப் போனார். அவருக்கு என்ன அருகதை இருக்கிறது அம்மா பற்றிப் பேச. அதுதான் தினகரன் மீது எனக்கு கோபம். பேட்டியின் போது அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆர்.பி. உதயக்குமார், மாபா பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து