பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 4 மாதங்கள் தடை

சனிக்கிழமை, 6 அக்டோபர் 2018      விளையாட்டு
Ahmed Shehzad 2018 10 6

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹமது ஷேசாத் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் கோப்பை தொடரில் விளையாடும்போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவருக்கு பல்வேறு சுழற்சி முறையில் செய்யப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்தது. இந்த குற்றச்சாட்டை முகமது ஷேசாத் மறுத்தார். என்றாலும் கடந்த ஜூலை 10-ந்தேதியில் இருந்து அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து வைத்திருந்தது.

இந்நிலையில் நான்கு மாதம் அவருக்கு தடைவிதித்துள்ளது. இதனால் வரும் நவம்பர் 10-ந்தேதி வரை அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. மேலும், அவருக்கு ஊக்கமருந்து தடுப்பு குறித்து  விழிப்புணர்வு பாடங்கள் எடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து