வீட்டின் படிக்கட்டாக பயன்படுத்திய விண்கல்லை 100 கோடிக்கு ஏலம் விட உரிமையாளர் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      உலகம்
Meteorite auction for 100 crores 07-10-2018

நியூயார்க்,அமெரிக்காவில் 88 வருடம் பழமையான விண்கல் ஒன்றை, வீட்டில் படிக்கட்டாக பயன்படுத்தி இருக்கிறார் பெண் ஒருவர்.அமெரிக்காவின் மெக்‌ஷிகன் மாகாணத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள விவசாய பெண் ஒருவரின் வீட்டில் உள்ள படிக்கட்டில் இந்த பழைய விண்கல் காணப்பட்டு இருக்கிறது. அது விண்கல்லின் ஒரு பாகம் ஆகும். இது மிகவும் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று கூறப்பட்டு உள்ளது.

தனது வீட்டின் படிக்கட்டில் பல வருடமாக இருக்கும் இந்த கல்லை பார்த்த அந்த வீட்டு பெண் பல வருடமாக சந்தேகத்தில் இருந்துள்ளார். இது என்ன மாதிரியான கல் என்று ஆராய்ச்சி செய்ய ஆசைப்பட்டு, அதனை அதே பகுதியில் உள்ள வானவியல் ஆராய்ச்சியாளரான மோனா சிர்பெஸ்கு என்ற பெண்ணிடம் கொடுத்துள்ளார். அவர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இது பழைய விண்கல் என்று கண்டுபிடிக்கப்ட்டது.

பழையது என்றால் இது மிகவும் பழையது. 88 வருடங்களுக்கு முன் விழுந்த விண்கல் ஒன்றின் உடைந்த துகள் ஆகும் இது. அதை வைத்து யாரோ வீடு கட்டும் போது இந்த படியை அமைக்க இதை பயன்படுத்தி இருக்கிறார்கள். 1930களில் இந்த விண்கல் பூமியில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை போகும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய விண்கல் துகள் இதுதான். இதில் நிறைய இரும்பு தாது பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதை வாங்க இப்போதே பலர் போட்டியிடுகின்றனராம். இதனால் இதை அந்த பெண் ஏலம் விடப் போவதாக கூறியுள்ளார். இதன் காரணமாக இதன் மதிப்பு இன்னும் பல கோடிகளை தாண்ட வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து