ரூ. 10 கோடிக்கு ஏலம் போன அழகிய ஓவியம் அடுத்த நொடியில் கிழிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      உலகம்
painting 10 crore auction

லண்டன்,லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம் ஏலம் முடிந்த அடுத்த நொடி அது சுக்குநூறாக கிழிக்கப்பட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த ஓவியர் பாங்சி. இவர் தன்னுடைய அடையாளத்தை பல வருடமாக மறைத்து வருகிறார். இவர் பெயரும் கூட செல்லப் பெயர்தான். மிகவும் பிரபலமான ஓவியரான இவர் லண்டனில் தனது ஓவியங்களை, தன்னுடைய குழு மூலம் ஏலம் விட்டு இருக்கிறார். உலக நாடுகளில் இருந்து பலர் இதை வாங்க வந்து இருக்கிறார்கள். இதில் அவரது ஓவியம் ஒன்று 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. கேர்ள் வித் ரெட் பலூன் என்று ஓவியம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. 2006-ல் ஆயில் பெயிண்ட் மூலம் வரையப்பட்ட ஓவியம் ஆகும்.

ஆனால் ஏலம் முடிந்த அடுத்த நொடி, இந்த ஓவியம் சுக்குநூறாக கிழிக்கப்பட்டது. ஏலம் எடுக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே, இந்த ஓவியம், அப்படியே கீழே இருந்த மிஷன் ஒன்றின் வழியே சென்று கிழிந்தது. கிழிக்கும் எந்திர ஒன்றின் வழியே சென்று கிழிந்துள்ளது.இதற்காக 2006-ம் ஆண்டே அந்த ஓவியத்துடன் ஒரு கிழிக்கும் எந்திரத்தை வைத்துள்ளார் ஓவியர் பாங்சி. இதில் 12 வருடமாக இயங்கும் பேட்டரி ஒன்றையும் வைத்துள்ளார். ஓவியம் விற்கப்பட்டவுடன் அதை ரிமோட் கன்ட்ரோல் வைத்து கிழித்துள்ளார்கள். இந்த ரிமோட்டை யார் இயக்கியது என்று யாருக்கும் தெரியாது.
அழிவுதான் பெரிய கலை, பெரிய அரசியல் என்று ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார். அதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி செய்ததாக அவர் கூறி இருக்கிறார்கள். இதை அவர் வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். இது விற்கப்பட்டவுடன் கிழிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இது ஏலம் எடுத்தவருக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அவர் இதனால் வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் வேறு சிலர், இப்போதுதான் இது அழகாக இருக்கிறது, இதை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து