முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட மாட்டாது வெள்ளை மாளிகை சூசகம்

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ரஷ்ய தளவாடங்களைக் கொள்முதல் செய்யும் விவகாரத்தில், இந்தியா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட மாட்டாது என்று வெள்ளை மாளிகை சூசகமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-அமெரிக்காவின் எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டமானது மிகவும் குறுகிய நோக்கமுடையது. இது அந்த நாடுகளின் ராணுவ பலத்தைக் குறைப்பதற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை அல்ல. மாறாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக பல்வேறு அவதூறான செயல்களில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.

முக்கியமாக, இந்தியா போன்ற நட்பு நாடுகளின் ராணுவ பலம் அதிகரிப்பதை இந்தச் சட்டம் தடுக்காது. இதன்படி, ரஷ்ய தளவாடங்களைக் கொள்முதல் செய்வதை நாடுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டுகளில், ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் தளவாடங்களை 40 சதவீத அளவுக்கு இந்தியா குறைத்துள்ளது. அதே வேளையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தளவாடங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து