முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'நமக்கு நாம்’ விழிப்புணர்வு சினிமா: அரசு உதவிக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

நமக்கு நாம்’ விழிப்புணர்வு சினிமா: அரசு உதவிக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மா. பா. பாண்டியராஜன் உறுதி
‘‘ஆதரவற்றவர்களுக்கு ஒரு இல்லம் நடத்தி, ‘நமக்கு நாம்’ சினிமாவில் யதார்த்தத்தைப் படமாக்கி அதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நல்லப் பணியை செய்த புரட்சி வேந்தன் சுந்தரமூர்த்தியைப் பாராட்டுகிறேன்’’ என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சூழ்நிலை காரணமாக ஆதரவற்று இருப்பவர்களுக்கு இல்லம் வைத்து நடத்துகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த இல்லத்திற்கு பல உதவிகளை செய்தார் என்று கூறினார்கள். அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி – அனைவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான். பல நல்ல கருத்துக்களை நாடகங்கள், சினிமா மூலமாகத்தான் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

ஆகையால் சினிமாத் துறைக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் தயாரிப்பாளர் சுந்தரமூர்த்திக்கு இயன்றதை அரசு செய்யும் என்று உறுதி கூறினார்.அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேசுகையில், இது மாதிரி விழிப்புணர்வு படங்களை நல்ல முறையில் சந்தைப் படுத்துதல் அவசியம். சிண்டிகேட் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வெளியிட வேண்டும் என்று அறிவுரை கூறி, தன் பங்குக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்தார்.

சுந்தரமூர்த்தி நடித்தி வரும் டான்சோலா ஆதரவு இல்ல மூத்த குடிமக்கள், குழந்தைகளுடன் ஹாஜா ஷெரீப், கோபி கமல், சுனிதா, ஜரீன், சுபாஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திருப்போரூர் முருகன் பிலிம்சின் ‘‘நமக்கு நாம்’’ இசை வெளியீட்டு விழா பிரசாத் ஸ்டூடியோவில் மிக எளிமையாக நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சுந்தரமூர்த்தி பேசும்போது, பல நல்லக் கருத்துக்களை இப்படம் கொண்டுள்ளது. ஆகையால் தன்னால் ஆன உதவிகளையும், அரசு சார்பான உதவிகளையும் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார் என்றார்.

அந்நாள் பிரபல நடிகர் ஐசரி வேலன் என் நாடகத்தில் பங்கேற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 25 நாடகங்கள் நடித்துள்ள அனுபவம் எனக்கிருக்கிறது. இதுவரை எந்தவொரு இயக்குனரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் சுந்தரமூர்த்தி.விழாவில் ஸ்டண்ட் டைரக்டர் ஜாக்குவார் தங்கம், லேனா தமிழ்வாணன், மக்கள்குரல் வீ.ராம்ஜீ, நடிகை ‘பசி’ சத்யா ஆகியோர் பேசினார்கள். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் வெட்டுவானம் சிவகுமார் வரவேற்றார். நிகழ்ச்சியை பத்திரிகையாளர் கவிதா தொகுத்து வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து