சவுதி வங்கி தலைவராக பெண் தொழிலதிபர் லுப்னா தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      உலகம்
Lubana 07-10-2018

ஜெட்டா,சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி 17.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் நாட்டின் மிகப் பெரிய 3-வது வங்கியாக உருவெடுத்துள்ளது. இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியாவின் பிரபல பெண் தொழிலதிபர் லுப்னா அல் ஒல்யன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக பழமைவாயத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வரும் சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஈடுபட்டுள்ளார். சவுதி விஷன் 2030 என்ற திட்டத்தின் படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.

புதிய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தவர். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018-ம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்தார். தங்களது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் குழுமத்துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து