தங்களது ஆதங்கத்தை தெரிவித்த கருண் நாயர், முரளி விஜய் மீதான நடவடிக்கைக்கு தயாராகும் பி.சி.சி.ஐ.

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      விளையாட்டு
BCCI 2018 10 02

 எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான அணித் தேர்வுக்குழுவை அதன் தேர்வுக் கொள்கைகளுக்காகவும், தொடர்பு கொள்ளாததற்கும் தங்கள் ஆதங்கத்தை கொட்டிய முரளி விஜய் மற்றும் கருண் நாயர் மீது நடவடிக்கைக்கு பி.சி.சி.ஐ. தயாராகி வருவதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்வுக்கொள்கைப் பற்றிப் பேசியதன் மூலம் விஜய், கருண் நாயர் ஆகியோர் மத்திய ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். பி.சி.சி.ஐ. விதிகளின் படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக் கூடாது. ஐதராபாத்தில் சி.ஓ.ஏ. கூட்டம் அக்டோபர் 11-ல் நடைபெறுகிறது. அதில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து சி.ஓ.ஏ. தலைவர் வினோத் ராய் கூறிய போது, இது முற்றிலும் குப்பையானது. தேர்வுக்குழுவின் தரப்பிலிருந்து வீரர்களை தொடர்பு கொள்ளவில்லை என்பது இல்லவேயில்லை. கருண், விஜய் கருத்துக்களை அணிதேர்வாளர்கள் வசம் விட்டு விட்டோம் என்று தெரிவித்தார். இதில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தில் உட்கார வைக்கப்பட்ட கருண் நாயர் போதாக்குறைக்கு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நீக்கப்பட்டார்.

விஜய் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியிலிருந்தே நீக்கப்பட்டார், ஆனால் அவர் எசெக்ஸ் அணிக்கு 3 போட்டிகளில் ஆடினார். ஆகவே கருண் நாயர் சிறியவர் அவரை மன்னிக்கலாம் என்று ஒருதரப்பினர் கூற, விஜய் கூறிய கருத்துகள் பி.சி.சி.ஐ.-யை காயப்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து