முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறிமுக ஆட்டத்திலேயே சதமடித்தபிரித்வி ஷா நீண்ட நாள் இந்திய அணியில் நிலைப்பார்: சச்சின்

ஞாயிற்றுக்கிழமை, 7 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை,அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே சதமடித்த பிரித்வி ஷா நீண்ட நாள் இந்திய அணியில் நிலைப்பார் என ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.18 வயதே ஆன பிரித்வி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடி 154 பந்துகளில் 134 ரன்களை குவித்தார். மேலும் முதல் டெஸ்டிலேயே சதமடித்த இளம் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இந்நிலையில் பிரித்வி ஷா ஆட்டம் குறித்து சச்சின் கூறியதாவது:-பிரித்வி தன் வசம் அபரிதமான ஆட்டத்திறனை தன்னுள் கொண்டுள்ளார். அவருக்கு எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். முதல் ஆட்டத்திலேயே பெரிய ஸ்கோரை அவர் எடுத்திருப்பது திருப்தி அளிக்கிறது. உள்ளூரில் சிறப்பாக ஆடிய ஒருவர் அதே போல் சர்வதேச அளவில் முத்திரை பதிப்பாரா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் சிந்தனை செய்வர். பிரித்வியை பொறுத்தவரை முதல் தடையை அவர் தாண்டி விட்டார். அணியில் தனது இடத்தை உறுதி செய்து விட்டார். மேலும் வேகமாக கற்று வருகிறார். வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் ஆட்டத்திறமையை பின்பற்றுவார் என்று சச்சின் தெரிவித்தார்.

பள்ளி அளவிலான ஆட்டத்தில் ஹாரிஸ் கோப்பை போட்டியில் 546 ரன்களை விளாசினார் பிரித்வி. அவரை 10 ஆண்டுகளுக்கு எனது நண்பர் ஜகதீஷ் சவான் என்னை பார்க்க வேண்டும் என பிரித்வி விரும்புவதாக தெரிவித்தார். கிரிக்கெட் தொடர்பாக ஆலோசிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார். அப்போது எதிர்காலத்தில் பிரித்வி இந்தியாவுக்கு விளையாடுவார் என அப்போதே தெரிவித்தேன். இது தான் எனது முதல் அனுமானம் என்றார் சச்சின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து