ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் அழிவுக்கான ஆரம்பமாக அமையும்: மணீஷ் திவாரி சொல்கிறார்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      இந்தியா
Manish Tewari 2018 10 08

புதுடெல்லி,  நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் அழிவுக்கான ஆரம்பமாக அமையும் என மூத்த காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளும் கட்சியான பா.ஜ.க., வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான முன்னோடியாக இந்த தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்கிறது. பா.ஜ.க.விடம் இருந்து இந்த மாநிலங்களை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பா.ஜ.க. பெரும் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டது. நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வின் அழிவுக்கான ஆரம்பமாக அமையும். ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மத்தியில் பெரும் கூட்டணியை உருவாக்க வழிவகுக்கும் என்று கூறினார்.

மேலும், பா.ஜ.க.வை எதிர்க்கும் வகையில் அனைத்து முக்கிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் முயற்சிக்கு விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து