பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: பெட்ரோல் ரூ.85.26; டீசல் ரூ.78.04

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      தமிழகம்
petrol 16-09-2018

சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 20 பைசா மற்றும் டீசல் 36 பைசா உயர்ந்துள்ளன.

2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், கார், லாரிகளின், ஆட்டோக்களின் கட்டணங்களும் உயர்ந்துள்ளதால் வணிகர்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் மறைமுகமாக உயர்ந்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் முயற்சியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அண்மையில் ரூ.2.50 குறைத்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைந்தும் எந்த பயனும் இல்லை. தொடர்ந்து எண்ணைய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில், நேற்று திங்கள்கிழமை  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 பைசா அதிகரித்து ரூ.85.26 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 31 பைசா அதிகரித்து ரூ.78.04 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 பைசா அதிகரித்து ரூ.82.03 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 பைசா அதிகரித்து ரூ.73.82 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 பைசா அதிகரித்து ரூ.87.50 ஆகவும், டீசல் லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.77.37 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து