காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      இந்தியா
assembly-election 2018 04 21

ஸ்ரீநகர்,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று திங்கள்கிழமை துவங்கியது.

கவர்னர் ஆட்சி நடைபெற்று வரும் "ஜம்மு காஷ்மீரில் 13 ஆண்டுகளுக்கு பிறகு 1,145 வார்டுகளுக்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளுக்கு முதல்முறையாக மின்னணு வாக்கு எந்திரத்தில் வாக்குப்பதிவு காலை  7 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் ஜம்முவில் 247, காஷ்மீரில் 149, லடாக்கில் 26 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அவற்றில் மொத்தமாக 1,283 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜம்முவில் 584, ரஜெளரியில் 61, பூஞ்ச் மாவட்டத்தில் 26 என மொத்தம் 671 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு மாநில அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள 26 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து