கிளிமஞ்சாரோ சிகரத்தில் இந்திய தேசிய கொடியைப் பறக்க செய்த ஆந்திர இளைஞர்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      இந்தியா
andhra youth national flag 2018 10 8

ஐதராபாத் : ஆந்திரப் பிரதேச மாநிலம், ஓங்கோலைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஹிம்மம்சா, தான்சானியா நாட்டின் உயரமான உச்சியான கிளிமஞ்சாரோ மலையைத் தொட்டு சாதனை படைத்துள்ளார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் உயரமான உச்சியும், தான்சானியா நாட்டில் உள்ளதுமான உகுரு உச்சி 5,895 மீட்டர் உயரம் கொண்டது. இங்குள்ள கிளிமஞ்சாரோ மலையைத் தொட்டுத் திரும்பி இருக்கிறார் ஹிம்மம்சா. அத்துடன் இந்த ஆண்டின் கோடை காலத்தில் எவரஸ்ட் சிகரமும் கடந்த மாதம் எல்ப்ரஸ் சிகரமும் சென்று முச்சாதனைகள் படைத்திருக்கிறார்.

கிளிமஞ்சாரோ தேசியப் பூங்காவின் வழிகாட்டுதலோடு, கிபோவில் இருந்து கடந்த 3-ம் தேதி நள்ளிரவு தனது பயணத்தைத் தொடங்கிய ஹிம்மம்சா, உள்ளூர் நேரப்படி காலை 7.40 மணிக்கு கிளிமஞ்சாரோ இருக்கும் உகுரு மலையை அடைந்திருக்கிறார்.

இதுகுறித்து ஹிம்மம்சா கூறுகையில், பகல், இரவு என தொடர்ந்து மாறி வரும் வெப்ப நிலையில் செல்வது சவாலாக இருந்தது. அடுத்ததாக அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மலைச் சிகரங்களை நோக்கிப் பயணிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து