முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடரும் கன மழை: 61 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

கூடலூர் : நீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடருவதால் வைகை அணை நீர்மட்டம் 61 அடியை எட்டியுள்ளது.

133.50 அடியாக...

முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 5 நாட்களில் அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.50 அடியாக உள்ளது. 3746 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1906 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் பாசனத்திற்கு போக வைகை அணையை வந்தடைகிறது. மேலும் மூலவைகையாற்று பகுதியில் மழை தொடர்கிறது.

60.96 அடியாக...

இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 2350 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.96 அடியாக உள்ளது. இதே ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48 அடியாக உள்ளது. அணைக்கு 135 கன அடி நீர் வருகிறது. நீர் திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக உள்ளது. 163 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 12, தேக்கடி 10.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 2, வீரபாண்டி 27, வைகை அணை 44.6, மஞ்சளாறு 13, சோத்துப்பாறை 48, கொடைக்கானல் 2.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து