முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழைக்காலத்தில் நீரோட்டத்தில் செல்பி எடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டாம் - இளைஞர்களுக்கு அமைச்சர் உதயகுமார் அறிவுரை

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : மழைக்காலத்தில் பாய்ந்து வரும் நீரோட்டத்தை செல்பி எடுக்கும் முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நவீன கருவிகள்...

ஆழ்கடல் மீன்பிடிப்பை பொறுத்தவரை கன்னியாகுமரி மீனவர்களுக்கு நவீன கருவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கருவிகளின் முக்கியத்துவம் அதை பயன்படுத்தும் முறை பற்றி அறிந்ததும் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் நவீன கருவிகளுடன் ஈடுபட ஆர்வத்துடன் முன்வருவார்கள். கன்னியாகுமரியில் 46 படகுகள் காணாமல் போனதாக கருதப்படலாமா என்று கேட்கீறிர்கள். அவர்களுக்கு தகவல் சொல்லகூடிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் எந்த திசையில் இருக்கிறார்கள் என்பதை நோக்கி எங்களது பயணம் நடைபெற்று வருகிறது. அதுபற்றிய முயற்சியை நாங்கள் கைவிட்டு விடவில்லை.

ரூ.290 கோடி நிதி...

சென்னையை பொறுத்தவரை எவ்வளவு நேரம் மழை பெய்கிறது என்பதல்ல, எவ்வளவு மழை பெய்கிறது என்பது தான். அது தொடர்மழையா கனமழையா என்பதை பொறுத்து தான் தண்ணீர் தேக்கம் இருக்கிறது. சில இடங்களில் எவ்வளவு வேலை செய்தாலும் மழை நீர் தேங்கத்தான் செய்யும், உதாரணத்திற்கு வியாசர்பாடி அது ஒரு காலத்தில் குளமாக இருந்த பகுதி, அங்கு மழை நீரை வெளியேற்ற கூடுதல் பம்புகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் மழைக்கால மீட்பு நடவடிக்கைக்கு ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வுக்கூட்டம்

இதனை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு படிப்படியாக மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் குறித்து மூன்று நாளில் மீண்டும் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும்.

கடும் நடவடிக்கை

மழைக்காலங்களில் நீரோட்டத்தின் வேகம் குறித்து அவ்வளவு சீக்கிரம் அறிய முடியாது. நீர் நிலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட நீரோட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பாய்ந்து வரும் நீரோட்டம் குறித்து இளைஞர்கள் ஆர்வமிகுதியில் செல்பி எடுக்க முயற்சிக்கிறார்கள் அதனை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் குளத்தில் ஆற்றில் நீர்நிலைகளில் குளிக்க குழந்தைகளை அனுமதிக்க கூடாது. துணிகள் துவைக்க கால்நடைகளை குளிப்பாட்டக்கூடாது. விலை மதிப்பு மிக்க மனித உயிரிழப்பை தவிர்க்க வேண்டும். என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து