முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு - கிறிஸ் கெயிலுக்கு இடமில்லை

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

கரீபியன் : இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை.

இந்திய வெற்றி

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3-இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 4-ம் தேதி துவங்கியது. இந்த போட்டியில், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  2-வது டெஸ்ட் போட்டி வரும், 12 ஆம் தேதி துவங்க உள்ளது.

கெயில் இல்லை...

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிராக உள்ள ஒருநாள் மற்றும் 20-ஓவர் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், அனைவரும் ஆச்சர்யப்படும் படியாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில், இடம் பெறவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக கிறிஸ் கெயில், இந்திய அணியில் இடம் பெற விருப்பம் இல்லை என கூறியதால், கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.

ஒருநாள் அணி வீரர்கள்:

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பபியன் ஆலன், சுனில் ஆம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்திரபால் ஹேம்ராஜ், ஷிம்ரோன் ஹேட்மைர், ஷை ஹோப், அல்சாரி ஜோஷப், எவின் லெவிஸ், ஆஸ்லி நர்ஸ், கீமோ பவுல், ரவ்மன் பவுல், கீமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஒஷ்னே தாமஸ்,

டி-20 போட்டிக்கான வீரர்கள்

கார்லஸ் பிராத்வைத் (கேப்டன்), பாபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷிம்ரோன் ஹெட்மைர், எவின் லெவிஸ், ஒபெட் மெக்கய், அஷ்லே நர்ஸ், கீமோ பால், க்ரை பீரே, கிரன் பொல்லர்டு, ரவ்மன் பவுல், தினேஷ் ராம்தின், ஆண்ட்ரூ ரஸ்ஸல், ஷேர்பேனே ரதர்போர்டு, ஒஷனே தாமஸ்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து