விபத்தில் சிக்கி உயிர் தப்பினேன்: ஆஸி. வீரர் ஹெய்டன் தகவல்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      விளையாட்டு
Former Matthew Hayden 2018 10 8

மெல்போர்ன் : குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிர் தப்பினேன் என்று ரத்தக் காயம் படத்துடன் இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

வர்ணனையாளராக...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் மேத்யூ ஹெய்டன். இடது கை தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஹெய்டன் மொத்தம் 103 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடங்கள் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள் அடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

விடுமுறையை கழிக்க...

கிரிக்கெட் மட்டுமின்றி சர்ஃபிங் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் சர்ஃபிங் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான குயின்ஸ்லாந்தில் வசித்து வந்ததால் இதில் அவருக்கு சிறு வயது அதிக ஆர்வம் உண்டு. குயின்ஸ்லாந்து நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள ஸ்டார்ப்ரோக் தீவில் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார். அங்கு தனது மகனுடன் சர்ஃபிங்கில் ஈடுபட்டுள்ளார்.

லேசான காயத்தால்...

அப்போது திடீரென மணல் குவியலில் மோதி ஏற்பட்ட விபத்தில் ஹெய்டன் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக லேசான காயத்தால் உயிர் தப்பினார். கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் எலும்பு முறிவு மற்றும் தசைகள் கிழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட விபத்தில் இருந்து விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ரத்தக் காயத்துடன் உள்ள படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தகவலை கூறியுள்ளார்.

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து