மத்தியப்பிரதேச வணிக வளாகத்தில் திடீர் தீவிபத்து: 7 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Madhya Pradesh shopping complex fire 2018 10 09

போபால்,  மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் பர்ஹான்புர் பகுதியில் அமைந்துள்ளது பகிசா வணிக வளாகம். நேற்று முன்தினம் இரவு அந்த வணிக வளாகத்தில் இருந்த கடைகளில் பலர் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றியது. அந்த தீ மளமளவென வளாகத்தின் அனைத்து பகுதிக்கும் பரவியது. இதில், 7 பேர் சிக்கி காயமடைந்தனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து