கோவாவில் தஞ்சமடைந்த 150 குமரி மீனவர்கள் உணவின்றி தவிப்பு

பனாஜி, கடந்த 5-ஆம் தேதி கோவாவின் கோஸ்டானியா துறைமுகத்தில் தஞ்சமடைந்த குமரி மாவட்ட மீனவர்கள் 150 பேர் உணவின்றி தவித்து வருகின்றனர்.
தமிழக கேரளா கடல் பகுதிகளில் புயல் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, கன்னியாகுமரியில் இருந்து 15 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 150 குமரி மாவட்ட மீனவர்கள் புயலுக்கு பயந்து கடந்த 5-ஆம் தேதி கோவாவின் கோஸ்டானியா துறைமுகத்தில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், கரை ஒதுங்கிய தங்களுக்கு டீசல் குடிநீர் உணவுப் பொருட்கள் தருவதாக வாஸ்கோமா துறைமுகத்திற்கு வரச்சொல்லிவிட்டு, அவர்களையும் அவர்கள் சென்ற விசைப்படகுகளையும் துறைமுகத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் அலக்கழித்துவிட்டு பின்னர் டீசல், உணவு அளிப்பதாக அனுமதித்த நிலையில், குடிநீருக்கு ரூ.120 கேட்பதாகவும், பணம் இல்லாததால் உணவு, குடிக்கத் தண்ணீரின்றி தவிப்பதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மீனவர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.