தேச துரோக வழக்கு: லாகூர் நீதிமன்றத்தில் நவாஸ் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      உலகம்
Treason case 09-10-2018

இஸ்லாமாபாத்,மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக தொடுக்கப்பட்ட தேச துரோக வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஷாகித் ககான் அப்பாஸி ஆகியோர் லாகூர் உயர் நீதிமன்றத்தில்  ஆஜராகினர்.

டான் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் சிரில் அல்மெய்டாவும் நீதிமன்றத்தில் ஆஜரானார். நவாஸ் ஷெரீப் மீதான வழக்கு விசாரணைக்கு வருவதையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நவாஸின் தொண்டர்கள் ஏராளமானோர், நீதிமன்றத்தின் வாசலில் திரண்டிருந்தனர்.

நவாஸ் ஷெரீப், ஷாகித் ககான் அப்பாஸி, சிரில் அல்மெய்டா ஆகிய மூவரும், நீதிபதி மஸாஹர் அலி அக்பர் நக்வி தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் ஆஜரானார்கள். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அன்றைய தினம், பாகிஸ்தான் அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நவாஸ், அப்பாஸி, சிரில் அல்மெய்டா ஆகிய மூவரும் பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து