முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் முதுகில் குத்த சதி நடக்கிறது! சகோதரர்கள் மீது லல்லு பிரசாத் மகள் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா,பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவருமான லல்லு பிரசாத் யாதவின் குடும்பத்தில் அரசியல் அதிகார போட்டி தலை தூக்கியுள்ளது. தன் முதுகில் குத்த சதி நடப்பதாக லல்லுவின் மூத்த மகள் மிசா பாரதி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

\கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பதவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியும் கணவர் மீதான வழக்குகளை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதனால் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியை அவரது மகன் தேஜஸ்வி யாதவ் வழிநடத்தி வருகிறார். அவரது மூத்த சகோதரியும், லல்லுவின் மூத்த மகளுமான மிசா பாரதி மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அரசியலில் ஆர்வம் காட்டாத நிலையில் தற்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர்கள் மூன்று பேரும் அதிகார மையங்களாக செயல்பட்டு வரும் நிலையில் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியிலும், லல்லு பிரசாத் யாதவின் குடும்பத்திலும் மோதல் நடந்து வருகிறது.
தேஜஸ்வி யாதவ் பற்றி சமீபத்தில் தேஜ் பிரதாப் யாதவ் மறைமுகமாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டார். பின்னர் அவற்றை அவர் நீக்கினார். இந்த நிலையில் சகோதரர்கள் குறித்து மிசா பாரதி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

பெயரை குறிப்பிடாமல் அவர் அளித்துள்ள பேட்டியில், என்னை அரசியலில் இருந்து ஒழித்துக்கட்டவும், முதுகில் குத்தவும் சதி நடக்கிறது. நான் ஒரு பெண். என் எதிரிகள் என்னை நேருக்கு நேர் சந்திக்க தங்குகின்றனர். ஆனால் நான் ராணி லட்சுமி பாய் போன்றவள். அவர்களை எதிர்த்து போரிட தயாராக உள்ளேன். தலைவராக இருந்தாலும் சரி, தொண்டராக இருந்தாலும் சரி என் முதுகில் குத்த நினைப்பவர்களை சகித்துக் கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து