தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: 20 அமைப்புகள் மீது சி.பி.ஐ. வழக்கு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
CBI 09-10-21018

தூத்துக்குடி,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கடந்த மே மாதம் 22-ம் தேதி கலவரமாக மாறியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள காவல் நிலையங்களில் 173 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதன் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. வசம் தமிழக அரசு ஒப்படைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பான கோப்புகளை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், தூத்துக்குடி சிறப்பு மண்டல துணை தாசில்தார் சேகர் கொடுத்த புகாரின் பேரில், தூத்துக்குடி மற்றும் வெளி மாவட்டங் களைச் சேர்ந்த 20 அமைப்புகள் மீது, சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து