அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
Chennai Meteorological Center2018-08-05

சென்னை,வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அக்டோபர் 11 வரை வங்கக் கடல் பகுதியிலும், அக்டோபர் 13ஆம் தேதி வரை அரபிக் கடல் பகுதியிலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து