முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய மதுபான ஆலைகளுக்கான அனுமதியை ரத்து செய்த கேரள அரசு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள மாநிலத்தில் புதிதாக மதுபான ஆலைகள் அமைப்பதற்காக வழங்கியிருந்த அனுமதியை அந்த மாநில அரசு ரத்து செய்தது.
ஆலைகள் அமைப்பதற்காக அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, அதுதொடர்பாக மாநில அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்த சில மணி நேரங்களில் முதல்வர் பினராயி விஜயன் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்வதற்காக அனைவரும் ஒன்றினைந்து நிற்க வேண்டிய இந்த சூழ்நிலையில், மதுபான ஆலை விவகாரத்தால் ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்காகவே அவற்றுக்கான அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது.உண்மையில் புதிதாக மதுபான ஆலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை. எதிர்க்கட்சிகள் ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கி, அதன்மூலம் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கையை கேரள அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.

தற்போது அளித்துள்ள அனுமதியை ரத்து செய்துள்ள காரணத்தால், மாநிலத்தில் மதுபான ஆலைகளுக்கு அரசு அனுமதி அளிக்காது என்று அர்த்தமில்லை. தற்போதைய நிலையில் கேரளத்தின் மதுபானத் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, மாநிலத்தில் புதிய மதுபான ஆலைகளின் தேவை அவசியமானதாகும் என்று பினராயி விஜயன் கூறினார்.
இதனிடையே, புதிய மதுபான ஆலைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. வரவேற்கத்தக்கது என்றாலும், அந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து