முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படத்திற்காக முன்பணம் பெற்ற விவகாரம் நடிகர் சிம்புவின் உடமைகளை ஜப்தி செய்ய ஐகோர்ட் கெடு

செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,திரைப் படத்திற்காக பெற்ற முன்பணம் 50 லட்சம் ரூபாயை வட்டியுடன் சேர்த்து அக்டோபர் 31-க்குள் திருப்பி செலுத்தாவிட்டால் நடிகர் சிம்புவின் கார் உள்ளிட்ட உடைமைகளை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து அரசன் என்ற தலைப்பில் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரிக்க திட்டமிட்டது. இந்த படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, ரூ. 50 லட்சம் முன் பணமாக கொடுக்கப்பட்டது. ஆனால் படத்தில் நடிக்காத காரணத்தால் முன் பணத் தொகையை திரும்ப வசூலிக்கும் வகையில் பட நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன் பணத்தை வட்டியுடன் சேர்த்து ரூ. 85 லட்சத்தை செலுத்த உத்தரவிடப்பட்டது. மேற்கண்ட தொகையை செலுத்த மேலும் அவகாசம் வழங்க வேண்டும் என சிம்பு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்ற நீதிபதி, அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். உத்தரவாதத்தை மீறி பணம் செலுத்த தவறும் பட்சத்தில் சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைல், பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து