முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 50 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் வழங்கினார் கேரள முதல்வர் பினராய்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீட்டுக்கான காசோலையை கேரள முதல்வர் பினராய் விஜயன் வழங்கினார்.

1994-ல் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு 50 நாட்கள் சிறை தண்டனை பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 14-ம் தேதி வழங்கியது. இதில் அவருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்திய விண்வெளி விஞ்ஞான தொழில்நுட்பத்தின் முக்கிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து ஆர்பிட் ஆப் மெமரீஸ் என்ற தனது சுயசரிதை நூலில் நம்பி நாராயணன் வெளிப்படையாக பல உண்மைகளை வெளியிட்டிருந்தார். அதில் தான் நிரபராதி என்றும், தான் கைது செய்யப்பட்டதில் முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கரங்கள் பின்னிருந்து செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தன்னைக் கைது செய்தவர்களை விசாரிக்கும்படியும் உரிய தண்டனை பெற்றுத் தரும் படியும் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை சென்ற மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட் அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையில்லை என தெரிவித்து அவரைக் கைது செய்தது தேவையற்றது எனவும் கூறி தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் இழப்பீட்டு தொகை ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை கேரள முதல்வர் வழங்கினார். சிறைத் தண்டனைக்கு இழப்பீடாக ரூ. 50 லட்சத்தை கேரள அரசு நிகழ்ச்சியொன்றில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனை நேரில் அழைத்து வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து