இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராக பதவியேற்கும் நொய்டா மாணவி

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      இந்தியா
noida student 2018 10 10

நொய்டா : போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராக நாற்காலியில் அமரலாம்.

நொய்டாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி இந்த சாதனையை செய்து காட்டியிருக்கிறார். சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக ஒரு காணொலிப் போட்டியை பிரிட்டன் தூதரகம் நடத்தியது. பாலின சமத்துவம் எனும் தலைப்பில் நடந்தப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து 58 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஈஷா பஹல், இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டிஷ் தூதராகப் பதவியேற்றிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து