Idhayam Matrimony

துபாய் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவிற்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

புதன்கிழமை, 10 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

202 ரன்னில்...

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது. 280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. இமாம்-உல்-ஹக் 23 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

462 ரன்கள்...

நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இமாம்-உல்-ஹக் உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இமாம்-உல்-ஹக் 48 ரன்களும், ஹரிஸ் சோஹைல் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஆசாத் ஷபிக் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அத்துடன் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பாபர் ஆசம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹோலண்ட் 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து