பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      உலகம்
Papua New Guinea earthquake 2018 10 11

நியூகினியா : பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் உள்ள நியூ பிரிட்டன் தீவிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7-ஆக பதிவாகி உள்ளது. கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவிலும் 40 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம்கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு சிறிது நேரத்தில் திரும்ப பெறப்பட்டது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து