கருக்கலைப்பு என்பது கொலைக்கு ஒப்பானது - போப் பிரான்சிஸ் கருத்து

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      உலகம்
pope francis2018-08-21

நியூயார்க் : கருக்கலைப்பு என்பது கூலிப்படையினரை வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது என்று கத்தோலிக்க மதத் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வாடிகனில் நிகழ்த்திய உரையில் அவர் கூறியதாவது:-

வளரும் கருவை பாதியிலேயே அழிப்பது, ஒருவரை கொல்வதற்கு சமமானது ஆகும். அந்தச் செயல், பிரச்னைகளிலிருந்து தப்புவதற்காக கூலிப் படையினரிடம் பணம் கொடுத்து மற்றவரை கொல்லச் சொல்வதைப் போன்றது ஆகும். பிரச்னைகளுக்கு கூலிப் படையினர்தான் தீர்வு வழங்குவார்கள் என்று நினைப்பது மிகவும் தவறான முடிவு. இவ்வாறு போப் தெரிவித்தார். அர்ஜென்டினாவில் கருக்கலைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா கொண்டு வரப்பட்டபோது, போப் பிரான்சிஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து