முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமிரபரணி மகா புஷ்கர விழா கவர்னர் பன்வாரிலால் நீராடினார் - லட்சக்கணக்கான பக்தர்களும் புனித நீராடல்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

சென்னை : தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று தொடங்கியது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்வர்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கர விழா  நடைபெறும். குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததாலும், கிரகங்களின் அமைப்புப்படி 144 ஆண்டுகளுக்கு பின்பு மகா புஷ்கர விழா தாமிரபரணியில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.

தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை 149 கி.மீ. பயணிக்கும் தாமிரபரணியில் மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றில் 64 தீர்த்தக்கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடும் வகையில் உள்ளன. பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், கருப்பன்துறை, குறுக்குத்துறை, கைலாசபுரம், வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட 18 தீர்த்தக்கட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி அகில பாரதிய துறவியர்கள் சங்கம் சார்பில் பாபநாசத்தில் அகில பாரதிய துறவியர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தாமிரபரணி புஷ்கர விழாவை தொடங்கி வைத்து புனித நீராடினார். பின்னர் விழா மலரை வெளியிட்டு சிறைப்புரையாற்றினார்.

சங்கத்தின் தலைவரும், பேரூர் ஆதீனமுமான சாந்தலிங்க மருதாசல அடிகளார் வரவேற்றார். செயலர் சுவாமி ராமானந்தா, விழா நோக்கவுரையாற்றினார். சிருங்கேரி சாரதா பீடத்தைச் சேர்ந்த ப்ரஹ்மானந்த ஸரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். தமிழக கவர்னர்  பன்வாரிலால் புரோஹித், ராம்கோ குழுமங்களின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, இமாசலப் பிரதேச முன்னாள் கவர்னர் விஷ்ணு ஸ்தாசிவ் கோக்ஜே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து