சமூகத்தில் யாராக இருந்தாலும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை தேவை - மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      இந்தியா
Maneka Gandhii 2018 10 11

புதுடெல்லி, : கடந்த ஆண்டு ஹாலிவுட் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை ‘மீ டூ’ என்ற பெயரில் ஹேஷ் டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டனர். இந்தியாவிலும் ‘மீ டூ’ இயக்கம் தொடங்கப்பட்டு, பல பிரபலங்கள் பாலியல் கொடுமைகள் குறித்து ட்விட்டரில் தெரிவிக்கின்றனர்.

இந்தி நடிகர் நானா படேகர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறினார். மலையாள நடிகர் முகேஷ் மீது மும்பையைச் சேர்ந்த பெண் இயக்குநர் டெஸ் ஜோசப் புகார் கூறினார். மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவரும் புகார் தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட் சிக்கு பேட்டியளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில்,

அரசியல், ஊடகங்கள், நிறுவனங் கள் போன்ற பல துறைகளில் அதிகாரப் பதவிகளில் இருப்பவர் கள் மீது பாலியல் புகார்கள் வருகிறது. உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சமூகத்தின் கேலி மற்றும் தனது நடத்தை பற்றி சந்தேகம் ஏற்படும் என்பதால் பெண்கள் இதுபற்றி வெளியே சொல்ல பயந்தனர். இப்போது துணிச்சலாக பேசுகின்ற னர். பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி பேசும்போது, அந்தக் குற்றச்சாட்டு யார் மீதாக இருந்தாலும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு குற்றச்சாட்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து