முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான தனிநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

23-ம் தேதிக்குள்...

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எம்.ஜி.ஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என்றும் அமைச்சரவையின் முடிவு யார் மூலம் மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அதில் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுதொடர்பான ஆவணங்களை அக்டோபர் 23 தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து 34 ஆண்டுகளுக்கு பிறகு ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து