அ.தி.மு.க.வுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். திட்டவட்டம்

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      தமிழகம்
edapadi-panneer 2018 10 11

சென்னை : சசிகலா அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை என்றும், அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தசம்பந்தமும் இல்லை என்றும் முதல்வர்எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான
எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.,

2 கோடியாக உயரும்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இந்த இயக்கத்தில் 1½ கோடி தொண்டர்கள் இருந்தனர். அதில் 31 லட்சம் பேர் இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள். அம்மா அவர்கள் இருந்தபோது 1½ கோடிக்கு மேற்பட்ட தொண்டர்கள் இருந்தார்கள். பாசறையில் இருந்தவர்களுக்கு வயதாகிவிட்ட காரணத்தினால் அவர்கள் உறுப்பினர்களாகத் தொடருவார்கள் மேலும் தற்போது இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர உள்ளார்கள். அப்போது அ.தி.மு.க.வில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடியாக உயரும்.

நீக்கி வைக்கப்பட்டார்

டிடிவி. தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார் எனவே அவரும் அ.தி.மு.க. உறுப்பினர் இல்லை. மேலும் அ.தி.மு.க. உறுப்பினர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களில் சசிகலா இல்லை,. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் எங்களது நிரந்தர பொதுசெயலாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது. அதனால் அவருக்கும் எங்களுக்கும் எந்தச்

சம்பந்தமும் கிடையாது. ஏற்கனவே சசிகலா பொதுக்குழு மூலம் நீக்கி வைக்கப்பட்டார். சசிகலா அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கிடையாது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூவரிடமும்

விளக்கம் கேட்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வரும், துணை முதல்வரும் தெரிவித்தனர். உடன் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் உடன்இருந்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து