கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 அக்டோபர் 2018      விளையாட்டு
indian team 2018 10 11

ஐதராபாத் : வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.

அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பெறும் இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக தொடர்கிறார்.

அணி வீரர்கள் விவரம்:

விராட் கோலி- கேப்டன், கே.எல்.ராகுல், பிரித்தி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட்- விக்கெட் கீப்பர், ரவீந்தர ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷார்துல் தாகூர்.

வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர்தான் அணியில் இடம்பெறும் வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை பிசிசிஐ நேற்றே அறிவித்துள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து