விஜயகாந்த் வீட்டில் பசுமாடுகள் திருட்டு

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      தமிழகம்
Vijaykanth cattle theft

சென்னை, தேமுதிக பொதுச்செயலளார் விஜயகாந்த் வீட்டிலிருந்து 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளது.

விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை, ஐயப்பன் தாங்கலை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அவ்வீட்டின் பாதுகாப்பு பணியில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த வீட்டில் விஜயகாந்தின் 3 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 3 மாடுகளும் இருந்த நிலையில், நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது 2 மாடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் மாடுகளை தேடினர். எங்கு தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை என்பதால், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாடுகள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை செய்தனர். மாடுகள் அதுவாக வழிதவறிச் சென்றுவிட்டனவா? அல்லது யாரேனும் மாடுகளை திருடிச்சென்றனரா? என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து