முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராட் கோலியின் கோரிக்கை ஏற்பு

வெள்ளிக்கிழமை, 12 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, வீரர்கள் தங்கள் மனைவி அல்லது காதலியை தொடர் முழுவதும் தங்க வைத்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுற்றுப்பயணம்

இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, வீரர்கள் தங்கள் மனைவி அல்லது காதலியை 2 வாரங்கள் வரை மட்டுமே தங்க தங்கவைத்துக் கொள்ளலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் புதிய விதியை அமல்படுத்தி இருந்தது. இந்த விதியை மாற்றி, தொடர் முடிவடையும் வரை மனைவி மற்றும் குடும்பத்தினர் தங்க அனுமதிக்க வேண்டும் என்று வீரர்கள் சார்பில் கேப்டன் விராத் கோலி கோரிக்கை வைத்திருந்தார்.

மாற்றம் இல்லை

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘விராத் கோலி கோரிக்கை வைத்திருப்பது உண்மை தான். அதுபற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு அவர்களின் முடிவுக்கு விட்டுவிட இருக்கிறோம். அதனால் ஏற்கனவே உள்ள விதிமுறையில் மாற்றம் இல்லை’ என்றார். இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று கிரிக்கெட் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடுக்க வேண்டாம்...

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் மற்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் விராத் கோலியின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வெளியே பேச மறுத்த, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள கிரிக் கெட் வாரிய தலைவர் வினோத் ராய், கிரிக்கெட் வாரியம் தொடர்பான செய்திகள் மீடியாவுக்கு கசிவது எப்படி என்றும் இனி அப்படி ஏதும் வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் இதுபற்றி பேட்டி ஏதும் கொடுக்க வேண்டாம் என்றும் கூட்டத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்பற்ற முடிவு...

இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நடந்த இந்தக் கூட்டத்தில்,  கேப்டன் விராத் கோலி, ரோகித் சர்மா, ரஹானே, தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ராகுல் ஹோரி, டயானா எடுல்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். வெளிநாட்டு தொடர்களில் தங்களின் மனைவி/ காதலிகளை அழைத்து செல்லும் விவாகரத்தில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாட்டு கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் முறையை பின்பற்றலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடர் முழுவதும் அவர்களை அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து