முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் : நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னையில் கூல் ஸ்கல்ப் ட்டிங் என்ற கொழுப்பை குறைக்கும் புதிய மருத்துவ சிகிச்சை அறிமுகம் நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார்.

உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியப்படி செதுக்கும் ‘கூல்ஸ்கல்ப்டிங் ’ என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றதுஇதனை முன்னணி நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். இதன் போது ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர் , அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, இவ்விழாவிற்கு வருகைத்தந்த சிறப்பு விருந்தினர்களான நடிகை ஹன்சிகா, டாக்டர் வி சேதுராமன், அஜித் ஷெட்டி, வீணா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர், இந்த மருத்துவ சிகிச்சைக்குறித்து விளக்கமளித்தனர்.

அதன் போது, இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சைப் பெற்று வெற்றிப் பெற்ற கல்லூரி மனைவி கௌரி மற்றும் பரதநாட்டிய கலைஞர் அபிராமி ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இவர்களை கருத்துகளுடன் கூடிய விவாத மேடையும் நடைபெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து