முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மற்றும் ரஷியாவுடனான இந்தியாவின் வர்த்தகத் தொடர்பை ஆய்வு செய்து வருகிறோம்: அமெரிக்கா

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஈரானுடனான எண்ணெய் வர்த்தகத்தை தொடரப் போவதாக இந்தியா முடிவு செய்திருக்கும் விவகாரத்தையும், ரஷியாவிடம் இருந்து அந்நாடு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்த விவகாரத்தையும் மிகக் கவனமாக ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நெய்வர்ட் தெரிவித்துள்ளார். இத்தகைய வர்த்தகத் தொடர்புகள் இந்தியாவுக்கு பயனளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஹீத்தர் நெய்வர்ட் கூறியதாவது,

ஈரானின் சட்ட விரோத நடவடிக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் உணர வேண்டும். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் அந்நாடு பெறும் வருமானம் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, சமூக விரோத செயல்பாடுகளுக்கு அவை அளிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அதன் அடிப்படையிலேயே ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இது தொடர்பான விளக்கங்களையும், விவரங்களையும் தோழமை நாடுகளிடம் தெரிவித்து வருகிறோம். இந்தியாவைப் பொருத்தவரை கடந்த மாதம் நடைபெற்ற இரு நாட்டு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையின்போதும் இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

ரஷ்யா மற்றும் ஈரானுடனான வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியா எடுத்திருக்கும் நிலைப்பாடு எந்த வகையிலும் பயனளிக்காது. அவற்றை மிகக் கவனமாக அமெரிக்கா ஆய்வுக்குட்படுத்தி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து