முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேப்டனாக அதிக ரன்கள் குவித்து சாதனை: மிஸ்பாவை பின்னுக்கு தள்ளி கோலி முதலிடம்

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஆசியநாடுகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய அந்த அணி மேற்கொண்டு 16 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

கோலி முந்தினார்...

வெஸ்ட் இண்டீஸ் அணி 311 குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. இந்தப் போட்டியில் 45 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 4222 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 65.96. ஆசிய நாடுகளின் கேப்டன்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 4214 ரன்களுடன் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா இருந்தநிலையில், அவரை விராட் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த வரிசையில், ஜெயவர்த்தனே (3665), டோனி (3454), கவாஸ்கர் (3449) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஸ்மித் முதலிடம்...

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தென்னாப்பிரிக்கா அணியின் கிரிம் ஸ்மித் 8659 ரன்கள் குவித்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 8வது இடத்தில் உள்ளார். ஆலன் பார்டர் (6623), ரிக்கி பாண்டிங் (6542), கிளிவ் லியாட் (5233), ஸ்டீபன் பிளமிங் (5156), அலெஸ்டர் குக் (4844), பிரையன் லாரா (4685) உள்ளிட்டோர் முதல் 7 இடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து