முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தகப் போரின் விளைவுகளை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தயாராக இருக்க வேண்டும்: உலக வங்கி பன்னாட்டு நிதியம் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

நுசா துவா, நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் முதலான பல்வேறு பிரச்னைகளின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று உலக வங்கி பன்னாட்டு நிதியம் ஆகியவை நாடுகளை அறிவுறுத்தியுள்ளன.

உலக வங்கி-பன்னாட்டு நிதியம் ஆகியவை இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு, இந்தோனேஷிய நாட்டிலுள்ள பாலி நகரில் நடைபெற்று வந்தது. இந்த மாநாட்டின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரு அமைப்புகளும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போரும், பொருளாதாரப் பிரச்னைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் அந்தந்த நாடுகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த நாடுகளைச் சார்ந்துள்ள மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால், அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் நாடுகள், மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவற்றுக்கான தீர்வில் ஈடுபட வேண்டும். வர்த்தகப் போரினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தயாராக இருக்க வேண்டும்.

மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து பயணித்தால், உலக நாடுகள் அனைத்தும் நிலையான வளர்ச்சியை அடையும் என்பதை அனைத்து நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து