முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்திரிகையாளர் காணாமல் போனதில் முக்கிய ஆதாரமாக ஆப்பிள் வாட்ச்: அமெரிக்கா - சவுதி இடையே போர் பதட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

இஸ்தான்புல், பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு 2 வாரமாகி விட்டது. இதில் நிறைய சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், ஜமால் கசோக்கி கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் இதில் முக்கிய சாட்சியமாக மாறியுள்ளது. ஜமால் கசோக்கி அந்த தூதரகத்துக்கு உள்ளே நடந்த எல்லா பிரச்சனைகளையும் தனது ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்துள்ளார். அங்கு நடந்த கொடுமைகளை ரெக்கார்ட் செய்துள்ளார்.

இந்த ஆப்பிள் வாட்ச் அவரது ஆப்பிள் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் போன் அந்த கட்டிடத்திற்கு வெளியில் நின்ற அவரது காதலியிடம் இருந்துள்ளது. ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்யப்பட்ட விஷயங்கள் இந்த ஆப்பிள் போனுக்கும் வந்து இருக்கிறது. அதன்படி அவர் கொடுமைபடுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆப்பிள் போனிற்கு வந்த ரெக்கார்ட்களில், ஜமால் கசோக்கி அழுவதும், கத்துவதும் பதிவாகி உள்ளது. அவரை சிலர் அடிக்கும் சத்தமும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஜமால் கசோக்கி 90 சதவிகிதம் கொலை செய்யப்பட்டு இருக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசுதான் இந்த கொலையை செய்திருக்கும் என்று உலக நாடுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா சவுதி மீது கடும் கோபத்தில் உள்ளது. இது அமெரிக்காவிற்கும் சவுதிக்கும் இடையில் போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து