முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா : ஆட்ட நாயகனாக உமேஷ் யாதவ் தேர்வு : இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன்

ஞாயிற்றுக்கிழமை, 14 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் எடுத்திருந்தது. ரஹானே 75 ரன்களிலும், பந்த் 85 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இருவரும் 3-ம் நாள் ஆட்டத்தை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கினர். இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி 106.4 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 56 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக பந்த் 92 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளை இழந்து அசத்தினார்.

இதைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், அந்த அணி 46.1 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்பிரிஸ் 38 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 2-வது இன்னிங்ஸ் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்தப் போட்டியில் மட்டும் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 56 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிதான இலக்கை இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்விஷா மற்றும் ராகுல் துரிதமாக ரன் குவித்து 16.1 ஓவர்கள் முடிவில் எட்டினர். இதன்மூலம், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிருதிவிஷா மற்றும் ராகுல் தலா 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்தப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய உமேஷ் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் சதம் மற்றும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் அரைசதம் என பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்திய அறிமுக இளம் வீரர் பிருதிவிஷா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து