முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாமின் 87 ஆவது பிறந்தநாள் ராமேசுவரத்தில் சமாதியில் மாணவ,மாணவிகள்,குடும்பத்தினர்கள் மலர் தூவி மரியாதை

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- பாரத ரத்னா டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 87 ஆவது பிறந்த தினமான நேற்று அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமாதியில் மாவட்ட ஆட்சித்தலைவா்  வீர ராகவ ராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் முன்னதாக அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.அங்கு ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் அப்தசுல்கலாம் சமாதியில் தூ ஆ ஓதி இனிப்பு வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் தொடர்ந்து பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ரோட்டரி சங்க  நிர்வாகி நாகராஜ்,நடிகர் தாமு,சென்னை பகுதியை சேர்ந்த மருத்துவர் ராகவன்,ஜமாத்  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது.
 மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவா் பாரத ரத்னா டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரத்தில் பிறந்து உலக நாடுகள் போற்றும் விதமாக தலைசிறந்த விஞ்ஞானியாகவும், இந்திய தேசத்தின் முதல் குடிமகனாகவும் உயா்ந்தவா். குழந்தைகள், இளைஞா்கள் என அனைவரும் போற்றி பின்பற்றிடும் வகையில் சமுதாயத்தில் மிகச்சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்தவா். இந்த தேசத்திற்கு அவா் செய்த சேவையினை கெளரவித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளை ‘இளைஞா் எழுச்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது. அந்த வகையில் மிகச்சிறப்பான இந்நாளில் இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள தேசிய நினைவகத்தில் பாரதரத்னா டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி மாரியாதை செய்யப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்நிகழ்வில் அவரது குடும்ப உறுப்பினா்களும் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி. இன்றைய இளைஞா்கள், மாணவ, மாணவியா்கள் டாக்டா;.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவா்களின் வாழ்க்கையினை முன்னுதாரணமாகக் கொண்டு, அவரது சிந்தனையினை பின்பற்றி வாழ்ந்திட உறுதி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து