முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் வயிறு நிறைவதற்கு உணவிடவில்லை - பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : வாய் நிறையப் பேசுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பிரதமர் மோடி, மக்களின் வயிறு நிறைவதற்கு உணவிடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் உலக அளவில் பசி, பட்டினி இல்லாத 119 நாடுகளின் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், 103-ஆவது இடத்தில் இந்தியா உள்ளது. இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட வழிவகுத்தது.

இதையடுத்து, கடந்த ஆண்டு 100-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது மேலும் 3 இடங்கள் சரிந்திருப்பதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது சுட்டுரையில்   நாட்டின் காவலராக இருக்கும் பிரதமர் மோடி, பல்வேறு சொற்பொழிவுகளையும், உரை வீச்சுகளையும் நிகழ்த்துகிறார். ஆனால், பாமர மக்களின் வயிறு பசியால் வாடுவதை மறந்துவிட்டார். எண்ணற்ற யோகப் பயிற்சிகளைச் செய்யும் அவர், பட்டினியைப் போக்கத் தவறிவிட்டார் என்று அதில் ராகுல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், பட்டினி மிகுந்த நாடுகளில் இந்தியா இருப்பது வெட்கத்துக்குரிய விஷயம் என்றார். இதுதொடர்பாக கருத்து கூட தெரிவிக்காமல் இருக்கும் பிரதமர் மோடி, இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மட்டும் என்ன செய்யப் போகிறார்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து