முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் 3-வது தொடக்க வீரராக முரளிவிஜயா ? அகர்வாலா? தீவிர பரிசீலனையில் தேர்வுக்குழு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர் ஆகியோரை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு தீவரிமாக ஈடுபட்டுள்ளது.

ஆஸ்திரேலியா பயணம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது உள்ளூரில் வெஸ்ட் இண்டீஸ்டன் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது. நவம்பர் 11-ந்தேதியுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிகிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 21-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் ஆடுகிறது.

திறமையை வெளிப்படுத்துமா?

முதலில் 20 ஓவர் போட்டியும், பின்னர் டெஸ்டும் நடக்கிறது. டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. சொந்த மண்ணில் டெஸ்டில் சிறப்பாக விளையாடும் இந்திய அணியால் வெளிநாடுகளில் சாதிக்க முடியவில்லை. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி ஆஸ்திரேலிய பயணத்தில் திறமையை வெளிப்படுத்துமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் தொடருக்கு...

இதற்கு ஏற்ற வகையில் வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை தேர்வு குழுவுக்கு இருக்கிறது. 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படும். இந்திய அணியில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் தயாராக இருக்கிறார்கள். வெளிநாட்டு தொடருக்குச் செல்லும்போது மாற்று தொடக்க பேட்ஸ்மேனுடன் செல்ல வேண்டும். அதேபோல் விக்கெட் கீப்பருக்கு ரிஷப் பந்த் உள்ளார். அவருக்கும் மாற்று நபர் தேவை.

தேர்வு குழு ஆலோசனை

இதனால் 3-வது தொடக்க வீரர் யார்? 2-வது விக்கெட் யார்? என்பதை இந்திய அணி நிர்வாகமும், தேர்வு குழுவும் முடிவு செய்யும். இது தொடர்பாக தேர்வு குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மயாங்க் அகர்வால் 3-வது தொடக்க வீரராக இடம் பெற்று இருந்தார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கமாக விளையாடும் தொடக்க வீரர்களான முரளி விஜய்யும், தவானும் கழற்றி விடப்பட்டனர். ஆஸ்திரேலிய பயணத்தில் தவான் இடம் பெற வாய்ப்பு இல்லை. இதனால் 3-வது தொடக்க வீரராக முரளி விஜய் அல்லது அகர்வால் தேர்வு செய்யப்படுவார். முரளி விஜய் தேர்வுக்குழு குறித்து விமர்சனம் செய்திருந்ததால் அவருக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

வீக்கெட் கீப்பர்....

அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் மோசமாக ஆடினாலும் முரளி விஜய் அனுபவம் வாய்ந்தவர். கவுண்டி போட்டியில் சிறப்பாக ஆடினார். இதனால் முரளி விஜய்க்கு கடைசியாக மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படலாம். அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் உள்ளார். 2-வது விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பது அடுத்த கேள்வியாகும். சஹா இன்னும் முழு உடல் தகுதியுடன் இல்லை. இதனால் அவர் ஆஸ்திரேலிய பயணத்தில் இடம் பெறமாட்டார். பார்த்தீவ் பட்டேல், புதுமுக வீரர் பரத் ஆகியோரில் ஒருவர் 2-வது விக்கெட் கீப்பர் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. பரத் சமீபத்தில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான 4 நாள் ஆட்டத்தில் ‘சதம்’ அடித்து இருந்தார். இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து