முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரம்: டி.ஜி.பி.யுடன் கேரள கவர்னர் அவசர ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

 திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள டி.ஜி.பி.யுடன் அம்மாநில கவர்னர் சதாசிவம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

சபரிமலைக்கு நேற்று  காலை ஆந்திராவை சேர்ந்த செய்தியாளர் கவிதா, பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றனர். இருவரும் சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க பக்தர்கள் மறுத்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த கேரள அரசு, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இதனால் சபரிமலை சன்னிதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சபரிமலை நிலவரம் குறித்து கேரள டி.ஜி.பி. கேலாக்நாத் பெகராவுடன் கவர்னர்  சதாசிவம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்து பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில் கவர்னர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து