முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் நடவடிக்கையால் போர் விமானிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி : காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல் மோடி அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது இந்திய போர் விமானப் பயணிகளின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது,

"2014 முதல் காங்கிரஸ் நடத்தி முடித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்யாமல், முதலாளித்துவ நண்பர்கள் பயன்பெறும் வகையில் தற்போதைய அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கவே எண்ணுகிறது. அதனால், இந்திய போர் விமானப் பயணிகள் பழைய ஜேக்குவார் விமானங்களை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரான்ஸ் மற்றும் உலகின் மற்ற நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட தரக்குறைவான உதிரி பாகங்கள் தான் ஜேக்குவார் விமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்திய விமானப் பயணிகளின் உயிர் ஒவ்வொரு நாளும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட 126 ரபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம், இந்திய விமானப் படையில் உள்ள பழைய விமானங்களான ஜேக்குவார் போன்ற விமானங்கள் மாற்றப்பட்டிருக்கும். இதன் மூலம் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு அதன் தொழில்நுட்பமும் பகிரப்பட்டிருக்கும். அது வரும் காலத்தில் இந்தியாவை சுய சார்பற்ற நாடாக மாறுவதற்கு உதவியாக இருக்கும்.

ஆனால், அதற்கு மாறாக அனில் அம்பானியின் அனுகூலத்துக்காக மாற்றியமைக்கப்பட்டு 36 போர் விமானங்களாக குறைக்கப்பட்டது. அனைத்தும் பிரான்ஸ் நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளது. இந்த விமானங்கள் இந்தியாவுக்கு வர வருடங்கள் ஆகும்" என்றார் ராகுல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து