முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவலர்களுக்கு உடற்பயிற்சிக்கூடம் திறப்பு

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      மதுரை
Image Unavailable

மதுரை - மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட உடற்பயிற்சிக்கூடத்தை நேற்று  மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன்  திறந்துவைத்து  பார்வையிட்டார். மதுரை மாநகர காவல் ஆணையர் .டேவிட்சன் தேவாசீர்வாதம்   அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களும் தினசரி 35-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் உடலின் எடை சீராகவும், உடலின் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வுடன் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை உடற்பயிற்சிக்கு தரவேண்டும் என்றும் தொடர் உடற்பயிற்சியால் நோய் தடுப்பாற்றல் அதிகரிக்கும், இதனால் பல நோய்களிலிருந்து விடுபடலாம் என்றும் மற்றும் தன்னம்பிக்கை, உடல் வலிமை, ஆரோக்கியம் அதிகரிக்கும். மன அழுத்தம், பதற்றம், உடல் சோர்வு குறையும், முக்கியமாக பணியில் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உடற்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் காவல்துறையை சேர்ந்த அனைவரும் உடற்பயிற்சிக்கூடத்தை தினந்தோறும் பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து